Courtesy: Sivaa Mayuri
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாசவுக்கான செலவே முன்னணியில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அண்மைய நிதி வெளிப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
இதன்படி அவரின் தேர்தல் செலவு 1.13 பில்லியன் ரூபாய்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட பிரசாரச் செலவு 936.26 மில்லியன் ரூபாய்களாகும்.
தனிப்பட்ட செலவுகள்
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகளவு செலவு செய்தவர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவரது பிரசாரத்திற்காக 990.32 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது.
இறுதியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநரகுமார திஸாநாயக்கவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்வும் தனிப்பட்ட செலவுகள் எதுவும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.