Courtesy: Sivaa Mayuri
பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் தெளிவான யுக்தி என்று தேர்தல்கள் ஆணையகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, “நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் இந்த தருணத்தில் அரசாங்கம் இவ்வாறான ஒரு அறிவிப்பை விடுத்திருக்க கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
கடும் விமர்சனம்
மேலும், அரசாங்கம் இவ்வறிவிப்பை, ஏற்கனவே ஏன் தாமதப்படுத்தியது என்றும் கேள்வி எழுப்பிய அவர், தேர்தலை குறிவைத்து இந்த தாமதம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இந்த முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது, வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவதற்கான முயற்சி என்று, பெப்ரல் உட்பட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this