கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் நேற்று அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
கோவாவில் ஹிந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த திருமண நிகழ்ச்சியில் தளபதி விஜய், திரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
ரூ. 1000 கோடியெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. புஷ்பா 2 குறித்து அல்லு அர்ஜுன்
இந்நிலையில், நடிகை சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் இந்த புதுமண ஜோடியை வாழ்த்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
உணர்ச்சிபூர்வ பதிவு
கீர்த்தி சுரேஷின் ஒரு திருமண புகைப்படத்தை பதிவிட்டு அதன் கீழ் “இந்த புகைப்படம் என் இதயம் முழுவதும் நிறைந்துள்ளது. திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்கள் இருவருக்கும் என் அன்பும் வாழ்த்தும் ” என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஏன் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் சமந்தா கலந்து கொள்ள வில்லை என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.