முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

புதிய இணைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டுள்ளார்.

சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | Sambandhan Funeral Today In Trincomalee

இன்னும் சற்று நேரத்தில் அதிபர் ரணிலும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை நடைபெறவுள்ளது.

இரண்டாம் இணைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் இறுதி கிரியைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil wickremesinghe) ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை(K. Annamalai) பங்கேற்கவுள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | Sambandhan Funeral Today In Trincomalee

இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று(07) மாலை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இறுதி கிரியைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு திருகோணமலை நகர் முழுதும் ஆழ்ந்தல் இரங்கல் தெரிவித்து இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்து தொங்கவிடப்பட்டுள்ளது.

இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | Sambandhan Funeral Today In Trincomalee

முதலாம் இணைப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது (R. Sampanthan) இறுதிக் கிரியைகள் இன்றைய தினம்(7) இடம்பெறவுள்ளது.

இறுதிக் கிரியைகள் சம்பந்தனின் சொந்த ஊரான திருகோணமலையில்(Trincomalee) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த இரா. சம்பந்தன் கடந்த ஜூன் 30 ஆம் திகதி இரவு தமது 91 ஆவது வயதில் காலமானார்.

இறுதிக் கிரியை 

இதனையடுத்து, கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் கடந்த(03)புதன்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | Sambandhan Funeral Today In Trincomalee

அதன் பின்னர், சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நண்பகல் 12 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன்பின்னர் இரா.சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலை நகரினூடாக எடுத்துச் செல்லப்பட்டு மாலை 3 மணியளவில் இந்து பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/embed/8l3Kl-QnfTY

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.