புதிய இணைப்பு
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று (05) காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.
தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.
இதனையடுத்து சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்கள், உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறன்று (07) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITK) மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது (R .Sampanthan) பூதவுடல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து இன்று (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு (Trincomalee) எடுத்துச் செல்லப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று (04) பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலி
தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
மேலும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (07) இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/2kB3iR8GyDg