சிம்பு
சமீபத்தில் நடிகர் சிம்பு தனது அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு, அடுத்ததாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள STR 49 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அதே போல் STR 50 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கப்போவதாகவும், STR 51 திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் STR 49 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தில் அஜித் அணிந்திருக்கும் இந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா, இதோ
மேலும் இப்படத்தில் சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
ரசிகர்கள் எதிர்பார்க்கும் காம்போ
இந்த நிலையில், இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் சந்தானம் நடிக்கப்போகிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. மன்மதன் படத்தில் நடிகர் சந்தானத்தை அறிமுகம் செய்ததே சிம்பு தான்.
இதன்பின், இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்கள். இவ்வளவு ஏன், சக்க போடு போடு ராஜா திரைப்படத்தில் சிம்புவின் இசையில் தான் சந்தானம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.