முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்பில் அநுர அரசு : அம்பலப்படுத்திய சரத் வீரசேகர

விடுதலைப்புவிகள் அமைப்பு மற்றும் தமிழ் டயஸ்போராவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கள் காணப்படுவதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமை அலுவலகத்தில் நேற்று (19.05.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தக் குற்றம் இடம்பெறவில்லையென்பதை நிபுணர்களே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பிமலின் இந்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகள் 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பறிகொடுத்து, சொத்துகளை இழந்து முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து 16 வருடங்கள் நிறைவடைகின்றன.

தமிழ் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்பில் அநுர அரசு : அம்பலப்படுத்திய சரத் வீரசேகர | Sarath Weerasekara He Has Made An Accusation

எமது இராணுவ வீரர்களும் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். 14,000 வரையான இராணுவத்தினர் அங்கவீனமுற்றுள்ளார்கள். 

எனவே, இது தமிழ் மக்களுடனான போராட்டம் அல்ல. நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக செயற்பட்ட விடுதலைப் புலிகளுடன்  நாங்கள் போராடினோம்.

பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதைச் செய்திருப்பார்கள் என்றால் யுத்தக் காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். 

யுத்தக் குற்றங்கள்

இது இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்படும் தேசத்துரோக யுத்தக் குற்றங்கள் மீதான வெளி பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.

இது யுத்தக் குற்றம் செய்தோமென்று தமிழ் மக்களைக் கட்டாயமாக அல்லது எந்தவொரு காரணமுமின்றி கொலைசெய்தோம், அவர்களை சித்திரவதை செய்தோம் என்றும் வேண்டுமென்றே சாட்சியளிப்பது போன்றதாகும்.

தமிழ் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்பில் அநுர அரசு : அம்பலப்படுத்திய சரத் வீரசேகர | Sarath Weerasekara He Has Made An Accusation

இலங்கைக்கு எதிரான தேசத்துரோக பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது. காரணம், நாடாளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு உரையும் ஹன்சாட்டில் வெளியிடப்படும்.

அவ்வாறு ஹன்சாட்டிலிடப்பட்டதன் பின்னர் நாங்கள் யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச்சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகிவிடும். இதுவே மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாகும்.

எனவே, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சபை முதல்வர் எங்கிருந்தாரென்பது தெரியவில்லை. அந்தக் காலப்பகுதியில் பிமல் ரத்நாயக்க இங்கிருந்திருக்காவிட்டால் 22 இலட்சத்து 95 ஆயிரம் தமிழ் மக்களைப் பாதுகாத்துக்கொண்டே இந்த யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம்.

பிமல் ரத்நாயக்க

யுத்தகாலத்தில் எந்தவொரு யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை என்பதுடன், அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். 

தமிழ் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்பில் அநுர அரசு : அம்பலப்படுத்திய சரத் வீரசேகர | Sarath Weerasekara He Has Made An Accusation

அவ்வாறிருக்கையில், பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் ஏன் இவ்வாறு கூறுகிறார். விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

இவர் இதற்கு முன்னரும் இலங்கை சிங்கள பெளத்த நாடு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலைப்பாடுகளைக்கொண்ட பிமல் தற்போது நாட்டைக் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். 

கனடாவில், தமிழ் இனப்படுகொலையை எதிர்த்துப் போராட்டம் செய்து அதற்காக நினைவுத்தூபியையும் அமைக்கிறார்கள். எனவே, பிமல் ரத்நாயக்கவின் இந்தக் கருத்து அதற்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதென்பதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை” என தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.