டான்ஸ் ஜோடி டான்ஸ்
சரத்குமார், தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின் ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது படங்களிலும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.
நல்ல குணம்
இவர் கடந்த வாரம் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் சரிகமப மகா சங்கமத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்கும் மீனா, முத்து கஷ்டம் வீண்.. சிறகடிக்க ஆசை புரொமோ
அப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சந்துரு என்ற ஒரு போட்டியாளர் உள்ளாரே அவரை நான் பார்க்கலாமா என்று கேட்க அவர் வந்ததும் கட்டித்தழுவி பாராட்டியுள்ளார்.
அதாவது சந்துரு, 37 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 4-வது கட்டத்தில் இருக்கிறாராம். சந்துருவிற்கு, 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, ஆனால் சந்துரு இந்த நிலையில் இருப்பது அவரது குழந்தைக்கு தெரியாது.
என்னுடைய அப்பா இந்த நோயிலிருந்து கஷ்டப்பட்டு ஜெயித்தார் என்று என் குழந்தை தைரியமாக சொல்ல வேண்டும் என்பதற்காக நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று சந்துரு கூறியுள்ளார்.
இந்த விஷயம் அறிந்த சரத்குமார், மேடைக்கு வந்த சந்துருவை பார்த்து நீங்கள் எப்போதும் உங்களுடைய தன்னம்பிக்கையை விடக்கூடாது. உங்களுடைய திறமையை பார்த்து நான் வியந்து உங்களுக்கு ஒரு ஆஃபர் கொடூக்க வேண்டும் என நினைக்கிறேன்.
உங்களுக்கு நடிப்பில் ஆசை என கேள்விப்பட்டேன் ஒரு வாய்ப்பு தருகிறேன். எனது அடுத்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கிறீர்கள் என்று சொல்லி, அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் சரத்குமார்.