சரத்குமார்
தமிழ் சினிமாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர்களில் ஒருவர் சரத்குமார். இவர் தனது திரை வாழ்க்கையில் இதுவரை 150 படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் தயாரிப்பாளராக 10க்கும் மேற்பட்ட படங்களை சரத்குமார் எடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி தலைமகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் dude திரைப்படம் வெளியானது.


மீண்டும் ரிலீஸ்!! ஜிகிரிதோஸ்தாக விஜய் – சூர்யா நடித்த Friends திரைப்படம்.. எப்போது?
ஆசை!
இந்நிலையில், படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சரத்குமார் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” இந்தப் படத்திலிருந்து எல்லோரும் என்னை டியூட் என்று அழைக்க தொடங்கியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய்க்கே கணவனாக நடித்துவிட்டேன்.
அடுத்ததாக தீபிகா படுகோனேவுக்கு ஜோடியாக நான் நடிக்கலாம். தயாரிப்பாளர்களிடம் இப்போதே கேட்டுக்கொண்டால்தான் உண்டு. யாரும் பொறாமைப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.


