முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாமர சம்பத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும்!

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான திலித் ஜயவீரவை(Dilith Jayaweera) சுட்டிக்காட்டி “ இவரும் களனியை சேர்ந்த பாம்பா?” என கேள்வி எழுப்பியதால் சபையில் நகையொலி எழுப்பப்பட்டிருந்தது.

பல்கலைகழக மாணவர்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தபோதே சாமர சம்பத் தசநாயக்கவால்(Chamara Sampath Dassanayake) குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்போது திலித் ஜயவீரவை சுட்டிக்காட்டி இவரும் களனி பல்கலைகழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் என சுட்டிக்காட்டினார்.

திலித் ஜயவீர 

எனினும் திலித் ஜயவீர தான் ” கொழும்பு பல்கலையை சேர்ந்தவன் என சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.

சாமர சம்பத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும்! | School Scholarships For University Students

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாமர சம்பத் தசநாயக்க,

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்படி பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித்தொகையில் 2500 ரூபாயை அதிகரித்துள்ளமை போதாது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக நெடுஞ்சாலையில் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளுக்கு முகம் கொடுத்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களே.

அவர்களில் பெரும்பாலானவர்கள் களனியில் இருக்கின்றார்கள்.

பல்கலைக்கழக புலமைபரிசில்

தற்போதைய செலவீனங்களை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக புலமைபரிசில்களை அதிகரித்திருக்கலாம் என்பது எமது நிலைப்பாடு.

சாமர சம்பத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும்! | School Scholarships For University Students

மாணவர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து கட்டியெழுப்பிய அரசாங்கமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்.

அவ்வாறெனில் அவர்களுக்கு 2500 ரூபாயை வழங்க முடிவுசெய்தமை போதாத ஒன்று.

மேலும் பல்வேறு திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கியுள்ளீர்கள். அதனை கொஞ்சம் உங்கள் தரப்பில் உள்ள பின்வரிசை அங்கத்தவர்களுக்கும் வழங்குங்கள்.

இந்த வரவு செலவு திட்டத்தில் புரியாத சில விடயங்கள் உள்ளன.

உலருணவு பொதி

10000 ரூபாய் உலருணவு பொதிகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாமர சம்பத்தால் சபையில் இன்று சிரிப்பும் சலசலப்பும்! | School Scholarships For University Students

இது போதாத ஒன்று. ஆகக்குறைந்தது 15000ரூபா வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

14000 கிராம சேவகர் பிரிவு தற்போது நாட்டில் உள்ளது. அவ்வாறெனின் உங்கள் திட்டத்தின்படி ஒரு கிராமசேவகர் பிரிவுக்கு 5 பொதிகளை மாத்திரமே வழங்க முடியும்.

அடுத்த தேர்தல் ஒன்றும் வரவுள்ளது. இந்த நிலையில் இந்த ஐந்து பொதிகளை எவ்வாறு கொண்டு சென்று வழங்கவுள்ளீர்கள்?  நீங்களே உங்கள் மீது மண்ணை அள்ளி வீசியுள்ளீர்கள்” என்றார்.

இதன்போது ஆளும்தரப்பு எம்.பிக்கள் குருக்கிட்டபோது, “ உங்களுக்கான சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவியுங்கள்” என  சாமர சம்பத் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.