இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா இறந்தமைக்கு கடுமையான மன அழுத்தமே காரணம் என யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் மாவை சேனாதிராஜா கட்சியின் நடவடிக்கைகளால் கடுமையான மன அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதனாலேயே, அவரின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதாக வைத்தியர்கள் குறிப்பிட்டதை மாணிக்கவாசகர் இளம்பிறையன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

