போதைப் பொருள்
தமிழ் சினிமாவில் பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது.
வேறென்ன போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பிரபலங்கள் சிக்கிய விஷயம் தான்.
நடிகர் ஸ்ரீகாந்த் தான் போதைப் பொருள் பயன்படுத்தியதை அவரே ஒப்புக்கொண்டார், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கிருஷ்ணா தலைமறைவாக உள்ளார் என கூறப்பட்ட நிலையில் அவரை தேடிப்பிடித்து மருத்துவ பரிசோதனை எல்லாம் செய்துள்ளனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தது.

அடேங்கப்பா பிக்பாஸ் ஜுலியா இது, ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ
ஆனால் அவர் போதைப் பொருளை வாங்கி மற்றவர்கள் கொடுத்திருப்பதை போலீசார் ஏதோ கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவரையும் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சீமான் பேச்சு
பிரபலங்களின் போதைப் பொருள் விவகாரம் குறித்து சீமானிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா அப்பாவிகள்.

இவர்களை தவிர வேறு யாரும் போதைப்பொருள்களை பயன்படுத்தவில்லையா?
இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது, சினிமா வட்டாரத்தில் நடக்கும் கொக்கைன் விருந்துகள் குறித்து பாடகி சுசித்ரா கூட பேசியிருக்கிறார் என்றார்.

