உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற
முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16.04.2025) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்
போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்ற நிலையில்
வடக்கு – கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஜனநாயக தமிழ் தேசிய
கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடி தற்போது வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல சபைகளை கைப்பற்றும் நிலை
ஏற்படும்.எனினும் நாங்கள் நிர்ணயம் செய்யும் சக்தியாக இத்தேர்தலில்
காணப்படுவோம். யாருடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது.
குறிப்பாக தேசியத்தை நேசிக்கும் தமிழ் கட்சிகளுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி
அமைக்கும் சூழலை உருவாக்குவோம்.
இனி வருகின்ற காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இல்லாது விட்டால் எமது
பிரதேசங்களில் பிளவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும். தேசியத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையையும் ஏற்படுத்தும்.
தேசிய மக்கள் சக்தி அரசு
எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது நாங்கள் நிர்ணயம் செய்கின்ற சக்தியாக தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுடன்
இணைந்து ஆட்சி இமைக்கின்ற வாய்ப்புகளை உருவாக்குவோம்.
உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான
அனுமதியை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை.

எனவே உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற
முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும்.
மன்னாரில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளை அவர்கள் கைப்பற்றுவதன் ஊடாக தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற
நோக்கத்துடன் அவர்களின் மன்னார் விஜயம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/fgmxG9xU7sw

