செல்வராகவன்
தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி அதன் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் செல்வராகவன். அதன்பின் 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, NGK போன்ற படங்களை இயக்கி கெத்து காட்டினார்.
செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைந்தாலே அந்த படம் சக்சஸ் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. இயக்குநர் செல்வராகவன் என்பதை தாண்டி தற்போது மோஸ்ட் வாண்டட் நடிகராகவும் வலம் வருகிறார்.
2 வருடம் ஆகிவிட்டது ஆனால் இன்றும்.. மேடையில் எமோஷ்னலான நடிகை சமந்தா
ரகசியம்
இந்நிலையில், செல்வராகவன் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜா கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், “செல்வராகவனை சிலரிடம் உதவி இயக்குநராக சேர்க்க முயற்சி செய்தேன். ஆனால் என்னுடைய மகன் என்ற காரணத்தினால் அவரை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.
சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் கண்டிப்பாக சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், தலையெழுத்து இருந்தால் வந்து தான் ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார்.