முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடகிழக்கில் ஏகோபித்த அங்கீகாரத்தை கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

வடகிழக்கில் எமது அணிக்கு ஏகோபித்த அங்கீகாரம் வழங்கப்படுவதனால் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள
இலகுவாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் நேற்று (08) இடம்பெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

‘வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
போட்டியிடவுள்ள நிலையில் தமது வேட்டி மனுவினை தாக்கல் செய்து வருகின்றோம்.

75 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் மக்களுக்காக எதையும் செய்யாத நிலையில்
தற்போது ஒரு ஆட்சி மாற்றத்தினை மேற்கொண்டுள்ளனர்.

உரிமை போராட்டம்

ஆனால், இவர்களும் கூட தமிழ்
மக்களுக்காக எதையும் செய்யப் போவதில்லை.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் தலைமையிலான உரிமை போராட்டம் நிறைவுற்றதில் இருந்து தமிழ் தேசம் ஒரு
ஆபத்தான நிலையில் உள்ளது.

வடகிழக்கில் ஏகோபித்த அங்கீகாரத்தை கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி | Selvarajah Gajendran Press Meet Batticaloa

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தெளிவுபடுத்தப்பட்டு வருவதாலேயே தமிழ் தேசியம் இன்றும் உயிருடன்
இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
எமக்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக 15 தடவைகள் அங்கு சென்று
உரக்கக் கறியது எமது தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரமே.

அத்தோடு, கொழும்பிலோ வெளிநாட்டிலோ எமக்காக தூதுவர்களிடமோ, ஏனையவர்களிடமோ 13
தீர்வுக்கான ஆரம்பபுள்ளி அல்ல என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மக்களுக்கான தீர்வு 

இலங்கையில் இன நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டுமானால் சமஸ்டியே தீர்வு என கூறும்
ஒருவர் எமது தலைவர் மாத்திரமே.

மட்டக்களப்பு அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களில் எமது மக்களுக்கான
போராட்டங்களில் எமது தலைவர் முன்னின்று செயற்பட்டுள்ளதுடன், கைது
செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கில் ஏகோபித்த அங்கீகாரத்தை கோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி | Selvarajah Gajendran Press Meet Batticaloa

மயிலத்தமடுவிற்கு கூட எமது தலைவர் வருகை தந்த போது பௌத்த பிக்குவினால்
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

அங்கு சிங்கள மயமாக்கல் மேற்கொள்ள முயற்சித்த போது எமது தலைவர் முன்னிற்று
செயற்பட்டவர்.

வடகிழக்கில் இருந்து எமது அணிக்கு ஏகோபித்த அங்கீகாரம் வழங்கப்படுவதன் மூலம்
எமது இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள
இலகுவாக இருக்கும்.

தென்தமிழ் ஈழம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களுக்கும் உங்களது பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்
கொள்வதுடன், போதைபொருள் வர்த்தகத்தில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்
ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக எமது அணிக்கு ஆதரவு வழங்க வேண்டும். எமது இருப்பை
பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.