நடிகர் பிரபாகரன்
பனி விழும் மலர் வானம், காயம், கெட்டி மேளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் பிரபாகரன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
சென்னை முகலிவாக்கத்தில் இவர் வசித்து வந்தார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி சீரியல் ஷூட்டிங்கை இரவு முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்துள்ளது.
2 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மரணம்
இதனால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதிக்க அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோத்தித்து பார்த்த மருத்துவர்கள் நடிகர் பிரபாகரன் உயிர் பிரிந்ததை உறுதி செய்துள்ளனர். திடீர் மாரடைப்பால் இவருடைய மரணம் நிகழ்ந்துள்ளது.
இவருக்கு வயது 62. மறைந்த நடிகர் பிரபாகரனுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். மகள் 10வது படித்து வருகிறாராம். இவருடைய மரணம் சின்னத்திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.