சத்ய ராஜா
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முக்கிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் சத்யா ராஜா.
இவர் நடித்த சீரியல்களில் பெயர் சொல்லும் அளவிற்கு மக்கள் நினைவில் நிற்கும் தொடர் என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான்.
தற்போது ஜீ தமிழில் மௌனம் பேசியதே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சந்தோஷ செய்தி
சீரியல்களில் பெரும்பாலும் வில்லனாகவே நடித்து கலக்கிவரும் சத்யாவிற்கு வீட்டில் விசேஷம்.
அதாவது சத்யா மற்றும் அவரது மனைவி 3வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கலக்கல் புகைப்படத்துடன் அறிவிக்க தற்போது சீமந்தம் நடந்துள்ளது.
அந்த புகைப்படங்களை சத்யா வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.