நடிகர் நேத்ரன்
வெள்ளித்திரை தாண்டி மக்களிடம் அதிகம் ரீச் ஆகியிருப்பது இப்போது சின்னத்திரை தான்.
இந்த பிரபலம் அந்த படத்தில் நடித்தார் என்பதை விட இந்த சீரியல் நடிகர் தானே இவர் என்று அதிகம் பேசும் மக்கள் தான் உள்ளனர். அந்த அளவிற்கு சின்னத்திரைக்கு இப்போது மக்களிடம் மவுசு கூடியுள்ளது.
தற்போது நாம் மறைந்த சீரியல் நடிகரின் மனைவி கொடுத்த பேட்டி பற்றி தான் பார்க்கப்போகிறாம்.
தீபா
நடிகராக, நடன கலைஞராக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் தான் நேத்ரன். சின்னத்திரையில் பிரபலமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோயால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு பின் நேத்ரனின் மனைவியும், நடிகையுமான தீபா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், நேத்ரனுக்கு புற்றுநோய் அட்வான்ஸ் ஸ்டேஜ் என்பதே எங்களுக்கு 4 மாதங்களுக்கு பிறகு தான் தெரியும்.
கொஞ்சம் தான் சாப்பிடுவார், பிறகு கீமோதெரபி ஆரம்பித்த உடனே முதல் 5 நாட்கள் இருப்பார், 6வது நாள் மோஷன் போக ஆரம்பித்துவிடுவார். ஒரு நாளைக்கு 15 பேம்பர்ஸ் மாத்துவேன், என்னால் முடியவில்லை என்றால் பசங்க துடைப்பாங்க.
வள்ளியின் வேலன் சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிரபலம்.. பெண்களிடம் தவறாக நடந்தாரா?
அவங்க ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொன்னால் கூட பசங்க வேண்டாம் நீ வா நான் வெயிட் பண்றேன்னு சொல்லுவார். நான் படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பர்மிஷன் போட்டுட்டு வந்து பேம்பர்ஸ் மாத்திட்டு போவேன் என்று கூறியுள்ளார்.