கேப்ரில்லா
நடிகை கேப்ரில்லா செல்லஸ், 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதன்பின் டிக் டாக்கில் அழகான கருத்துள்ள வீடியோக்களை போட்டு பெயர் எடுத்தவர் நயன்தாரா நடித்த ஐரா, சூப்பர் ஸ்டாரின் கபாலி, காஞ்சனா 3 போன்ற படங்களில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.
சன் டிவியில் கடந்த 2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வந்தார், இந்த தொடர் கடந்த ஆண்டு 2023ம் முடிவுக்கு வந்தது.
வளைகாப்பு
சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்த நேரத்தில் கேப்ரில்லா கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்தார்.
இவரும் தனது கிராமத்தில் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார். இந்த நிலையில் நடிகை கேப்ரில்லாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது.
சுந்தரி சீரியல் பிரபலங்களும் கேப்ரில்லா வீட்டிற்கு சென்று அவரது வளைகாப்பை சிறப்பித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.