பிரியங்கா நல்காரி
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த தொடருக்கு முன் சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
அந்த சீரியலில் நடித்து முடித்தவர் அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்து சீதா ராமன், நள தமயந்தி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.
இடையில் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்தவர் பின் சில காரணங்களால் பிரிந்தார்.
தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ரோஜா 2வது சீசனிலும் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நேரத்தில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.