சந்தியா
பெங்களூரில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வரும் பிரபலங்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை சந்தியா.
இவர் தமிழில் அத்திப் பூக்கள், சந்திரலேகா, வம்சம் போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார். இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சந்தியா ராகம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகையின் பேட்டி
இவர் ஒரு பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், எனக்கு திருமணம் ஆகும்போது 24 வயது தான்.
இப்போது இருக்கும் ஒரு மெச்சூரிட்டி அப்போது இருந்திருந்தால் நான் திருமணம் ஆன 2வது நாளே விவாகரத்து வாங்கியிருப்பேன்.
இரண்டு வருடம் நீ தான் என் உலகம் என்று இருந்திருக்க மாட்டேன், டைம் தான் வேஸ்ட். முக்கியமாக எனக்கு குழந்தைகள் இல்லை, சில பேர் குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என நினைப்பார்கள், எனக்கு அது கூட இல்லை என கூறியுள்ளார்.