முல்லைத்தீவில் (Mullaitivu) சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
குறித்த கைது நடவடிக்கையானது, வட்டுவாகல் கடற்படையினரின் கடல் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வட்டுவாகல் பகுதியில் 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ். நகரில் விஷ பூச்சி கடித்து ஒருவர் உயிரிழப்பு
நீதிமன்றில் முன்னிலை
மேலும், நாயாறு கடற்படையினரால் மூன்று படகுகளும், கடலில் ஒளிபாச்சி கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, புல்மோட்டை, கொக்குளாய், மாத்தளன் பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கமைய, கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்
வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், குறித்த கடற்றொழிலாளர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிணையில்
விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை திகதியிடப்பட்டுள்ளது.
யாழ். கடலில் குழந்தை பிரசவித்த பெண்
நெருப்பின் நடுவில் நாங்கள் இருக்கிறோம் : ஜோர்டான் பகிரங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |