நடிகர் அஜித்
நடிகர் அஜித், தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் பிரபலங்களில் ஒருவர்.
கடைசியாக இவரது நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படம் இந்த வருடத்தில் வெளியான ஹிட் படங்களில் ஒன்றாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த படங்களின் லிஸ்டில் இணைந்துள்ளது.
அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார், அடுத்த வருடத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாடல்
சமீபத்தில் ஒரு பேட்டியில் பாடலாசிரியர் விவேகா அஜித்திற்கு பிடித்த பாடல் குறித்து கூறியுள்ளார்.
அதில் அவர், அஜித் சார் நான் எழுதிய பாடலை மிகவும் ரசித்து உள்ளார். குறிப்பாக வீரம் படத்தில் நான் எழுதிய ரத கஜ துரக பாடலுக்கு என்ன கட்டி புடிச்சி பாராட்டி என் வீட்ல என் மனைவி ரிங் டோனே இதான் சார் சொன்னார்.

அந்த பாட்டு அஜித் சாருக்கும் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

