நடிகர் அஜித் பத்மபூஷன் விருதை நேற்று குடியரசு தலைவர் கையால் வாங்கி இருந்தார். அந்த விழாவில் ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை அஜித், ஷாலினி என அனைவரும் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி இருக்கின்றனர்.
அஜித்தை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்ட நிலையில் அவர் சில வார்தைகள் மட்டும் பேசினார். அனைவருக்கும் நன்றி என கூறிய அவர், விரைவில் நேரில் சந்திப்போம் என கூறிவிட்டு சென்றார்.

ஷாலினி பேச்சு
ஷாலினி அஜித் செய்தியாளர்களிடம் பேசும்போது சில கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அஜித் பத்ம பூஷன் விருது வென்றது பற்றி கேட்டதற்கு ‘ரொம்ப பெருமையாக இருக்கிறது’ என ஒரே வார்த்தை மட்டும் ஷாலினி கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
View this post on Instagram
View this post on Instagram

