முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இசைப்பிரியாவிற்கு நீதி தேவையில்லையா… சபையில் கொந்தளித்த சாணக்கியன்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (R.Shanakiyan) கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்றைய (15.03.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

அனுராதபுரத்திலே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் ஏன் இந்த அரசாங்கமும் சரி நாட்டு மக்களும் சரி எத்தனையோ தமிழ் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிராக ஏன் இந்த அரசாங்கம் கொந்தளிக்கவில்லை. 

அவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா உயிரோடு இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் அரைகுறை ஆடைகளுடன் இருந்த காணொளிகள் வெளியாகியிருந்தன.

இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா? இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா”என அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

[

https://www.youtube.com/embed/sT-gXeqEEOc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்