எல்போர்ட் அரசாங்கம் தீர்மானங்களை நிறைவேற்றப்படுகின்ற போதிலும் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக
தெரியவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன்(Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில்(Batticaloa) நேற்றைய தினம் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாங்கள் வாகனம் ஓடுவதற்கு முன்னர் வாகனம் பழகும்போது எல்போர்ட் போட்டு கொண்டு
தான் ஓடுவது வழக்கம். ஆனால் இந்த அரசாங்கம் எல்போட் போடாமலே இப்போது பழகிக் கொண்டிருக்கின்றது.
புதிய அரசாங்கம்
களவு எடுத்து பணத்தை கொண்டு வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
எனினும், எந்த ஒரு விடயத்தையும் இந்த எல்போர்ட் அரசாங்கம் பூர்த்தி
செய்யவில்லை.
எமது பிரதேசங்களில் இருக்கும் சிறிய பிரச்சனைகளைகூட அரசாங்க
தீர்த்து வைக்கவில்லை.
ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டிய நிலை
அபிவிருத்திக்குழு கூட்டங்கள் நடைபெறுகின்றன, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் எதுவும் நடைபெற்றதாக
தெரியவில்லை. இதே விடயம்தான் புதிய அரசாங்கத்திலும் தொடர்ந்து கொண்டே
இருக்கின்றன.
இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் ஒரு மாத காலம் தாமதித்து பார்க்க
பார்க்கலாம்.
இல்லை எனில் ஆர்ப்பாட்டங்களை, செய்ய வேண்டிய நிலைக்குத்தான்
நாங்கள் தள்ளப்படுவோம். ” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/xzGRUv4dem0