குசாலான மலையில் விகாரை அமைக்கப்படவிருந்ததை தடுக்கும் நடவடிக்கையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரனோ பிள்ளையானோ ஈடுபடவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரான இரா. சாணக்கின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், “அதிக மக்கள் வாழும் பதுளை பிரதான வீதியில் உள்ள குசாலான மலையில் ஆலயம் ஒன்றின் நிலப்பகுதியில் சிங்கள பொளத்த விகாரை ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, அதனை நேரடியாக சென்று தடுத்து நிறுத்தியவர்கள் இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் தான்.
இல்லையென்றால் எமது வெடுக்குநாறிமலை அல்லது குருந்தூர்மலை ஆகியவற்றில் போல அவ்விடத்திலும் ஒரு விகாரை அமைந்திருக்கும். நாங்கள் தான் அதை தடை செய்திருந்தோம்.
இதற்கு, வியாழேந்திரனும் வரவில்லை. பிள்ளையானும் வரவில்லை. இலங்கை தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதை நிறுத்தி இருந்தோம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,