நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் அமெரிக்காவில் சினிமா படிப்பை முடித்துவிட்டு தமிழில் முதல் படத்தை இயக்குகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
ஷங்கர் கருத்து
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி இருக்கும் கேம் சேஞ்சர் பட ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
அதில் அவரிடம் தற்போது இளைய தலைமுறையினர் படம் இயக்க வருவது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. விஜய்யின் மகன் இயக்குனராக வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, “எல்லோரும் தகுதியோடு வருகிறார்கள். அது ஆரோக்கியமாக இருக்கிறது.”
“இன்னாருடைய மகன் என்பதால் வந்துடீங்க என யாரும் சொல்லிடக்கூடாது என்பதற்காக தகுதியை வளர்த்துக்கொண்டு தான் வர வேண்டும்” என ஷங்கர் கூறி இருக்கிறார்.