சக்தி திருமகன்
விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் சக்தி திருமகன். அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் செல் முருகன், கண்ணன், வாகை சந்திரசேகர், திரிப்தி ரவீந்திரா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு திரையரங்கில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லையோ என்கிற கேள்வி உள்ள நிலையில், OTT-க்கு வந்தபின் பலரும் அப்படத்தை பாராட்டி வருகிறார்கள். இப்படியொரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் மிஸ் செய்துவிட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.

சக்தி திருமகன் திரை விமர்சனம்
ஷங்கர் பாரட்டு
இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் தளத்தில் சக்தி திருமகன் படம் குறித்து ட்விட் செய்துள்ளார்.

“சக்தி திருமகன் படத்தை OTT-யில் பார்க்க நேர்ந்தது. சிந்தையை தூண்டும் படம். இயக்குநர் எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானதாகவும், கவனிக்கத்தக்கதாகவும் இருந்தன. பல பிரச்னைகளை ஒரே படத்தில் விவாதித்திருக்கிறார்கள். எதிர்பாராத விதத்தில் கதை தீவிரமடைந்துகொண்டே இருந்தது. படத்தின் இயக்குநர் அருண் பிரபுவுக்கு ஹாட்ஸ் ஆஃப். விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

