முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

என்னை கட்சியில் சேர்க்க மறுத்த மாவை : கடுமையாக சாடும் சாணக்கியன்

கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை (Mavai Senathirajah) சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என தெரிவித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் என்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறினார்.

பதவி ஆசை

இந்தநிலையில், 2016 ஆம் ஆண்டு சம்பந்தன் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தை சந்திக்கும் படி என்னை அறிவுறுத்திய நிலையில் இப்படியாகத்தான் நான் கட்சிக்குள் வந்தேன்.

தற்போது கட்சியில் இருந்து பதவி விலகிய தலைவர், பதவி ஆசையில் இருக்கின்றார் என்பதற்காக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

என்னை கட்சியில் சேர்க்க மறுத்த மாவை : கடுமையாக சாடும் சாணக்கியன் | Shankiyan Mavai Issues Interview Itak

சிலர் மாவை சேனாதிராஜாவை வளர்த்த கிடா அவரது மார்பில் பாய்ந்தது என்று எழுதியிருந்தார்கள் அத்தோடு அவர் என்னை வளர்க்கவுமில்லை, நான் அவருக்கு எதிராகப் பாயவும் இல்லை.

கடந்த 14 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது சகல கதவுகளும் மூடப்பட்ட அறையில் தான் நடைபெற்றது.

பேசப்பட்ட விடயங்கள்

இருப்பினும், மாவை சேனாதிராஜாவின் வருகையின் போது கதவு திறக்கப்பட்டது அந்த வேளையில் பேசப்பட்ட விடயங்கள் மாத்திரமே வெளியே நின்ற ஊடகவியலாளர்களுக்கு கேட்டது அவை செய்திகளாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

எனினும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டத்திற்கு கொழும்பு, அம்பாறை, திருக்கோயில் உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து அதிகாலை நான்கு மணிக்குப் புறப்பட்ட உறுப்பினர்கள் 10 மணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள் ஆனால், தலைவர் மாவை சேனாதிராஜா வரவில்லை அது வழமையாக நடப்பது தான்.

என்னை கட்சியில் சேர்க்க மறுத்த மாவை : கடுமையாக சாடும் சாணக்கியன் | Shankiyan Mavai Issues Interview Itak

நாங்கள் எல்லோரும் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும் எனவே, இம்முறை மிகத் தாமதமானதால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு நான் கூறினேன் அதற்கு சிவமோகனால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் கட்சியின் சரிவை சீரமைப்பது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றோம் என்பது பற்றிப் பேச வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.