படைத்தலைவன்
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த சகபாதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் மதுர வீரன் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின் ஷண்முக பாண்டியன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் படைத்தலைவன்.

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் இப்படத்தில் ஷண்முக பாண்டியனுடன் இணைந்து கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், யாமினி சந்தர் ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த கேப்டன் விஜயகாந்தை இப்படத்தில் நடிக்க வைத்திருந்தனர். நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் ரசிகர்களால் ஹவுஸ் ஃபுல்.


Ballerina திரை விமர்சனம்
வசூல்
இந்த நிலையில், ஷண்முக பாண்டியனின் படைத்தலைவன் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 80 லட்சம் முதல் நாள் வசூல் செய்துள்ளது.


