எதிர்வரும் அதிபர் தேர்தலில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார (Shantha Bandara) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது தொடர்பாக மக்கள் இருமுறை சிந்திப்பார்கள் அத்தோடு கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியினரின் செயற்பாடுகளை மக்கள் மறக்கவில்லை.
தொழிலுக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள் : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
எரிவாயு எரிபொருள்
கடந்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கியிருந்த நெருக்கடிகளை சாதகமாக பயன்படுத்தியே வாக்கு எண்ணிக்கையை பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தியினர் முயற்சிக்கின்றனர்.
ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்கள் சுமூகமாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதுடன் இன்று நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் எரிவாயு எரிபொருள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு இல்லை.
தரவரிசையில் சறுக்கிய வனிந்து ஹசரங்க
அத்தியாவசிய பொருட்கள்
மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைப்பதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தொடந்தும் முயற்சித்து வருகின்றார் அத்தோடு நாட்டின் பொருளாதாரம் ஸ்திரதன்மை அடைந்துள்ளது.
நாட்டிற்குள் சுமூகமான சூழ்நிலை காணப்படுகின்றது எனவே இவ்வாறான ஒரு சூழலில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டிற்கு பொருத்தமான தலைவர் ஒருவரே அதிபராக தெரிவு செய்யப்படுவார் அத்தோடு சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |