விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
9 கைதிகளுடன் சிறைச்சாலையின் M-02 அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச நேற்று இரவு சிறை மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறை அறை
முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் சஷீந்திர ராஜபக்ஷ தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் தொடர்பான சஷீந்திர ராஜபக்ஷ நேற்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விளக்க மறியல்
கைது செய்யப்பட்ட சஷீந்திர நேற்று மதியம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவு பிறப்பித்தார்.
சஷீந்திர ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.