முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீர்குலைந்த ஐக்கியத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்து

தமிழர்களின் ஆயுதப் போராட்ட
காலகட்டத்தில் போராட்ட அமைப்புகள் பிளவுபட்டு நின்று எமது இலக்கை அடைய
முடியாது என்பதை உணர்ந்து கொண்ட போது ஈழ
மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் க.பத்மநாபா இதற்கு மத்தியில் ஒரு ஐக்கியத்தை உருவாக்குவதற்காக கடும் முயற்சி எடுத்து
அதில் வெற்றியும் அடைந்தார் என ஈழமக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்
செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு
அவரால் இன்று (18.06.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏகாதிபத்திய சக்தி

“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தோற்றுவித்தவர்கள் சிங்கள பௌத்த
மேலாதிக்கவாதிகளாக இருப்பினும் அன்றைய பூகோள அரசியல் சூழலில் அதற்கு எண்ணெய்
ஊற்றி இனவாதத் தீயை அணையாமல் பார்த்துக்கொண்டது ஏகாதிபத்திய சக்திகள் என்பதை
சரியாக இனங்கண்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான புரட்சிகர அமைப்புகளுடன்
கரம்கோர்த்து ஈழ மக்களின் நண்பர்களையும் எதிரிகளையும் சரியாக அடையாளம்
காட்டினார்.

shattered-unity-rebuilt-sivashakti-anandan-insists

அதன் காரணமாகவே ஏகாதிபத்திய சக்திகளின் சூழ்ச்சிகளால் ஐக்கியம்
சிதைக்கப்பட்டு, எது தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று தஞ்சம்
அடைந்தோமோ அதே தமிழகத்தில் எமது செயலாளர் நாயகத்துடன் பதின்மூன்று தோழர்களும்
படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவே எமது செயலாளர் நாயகத்தின்
மறைவிற்குக் காரணமாக அமைந்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் 

ஆயுதப் போராட்ட எழுச்சியின் விளைவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஏற்படுவதற்கும்
மாகாணசபை உருவாகுவதற்கும் காரணமாக அமைந்தது.

மாகாணசபை முறைமையை எப்படியாவது
சீர்குலைத்து விடவேண்டும் என்பதில் சிங்கள பௌத்த பேரினவாதமும் ஏகாதிபத்திய
சக்திகளும் கங்கணம் கட்டி செயற்பட்டன. இதன் பின்விளைவுகளை எமது சமூகம் நன்கு
அனுபவித்துள்ளது.

shattered-unity-rebuilt-sivashakti-anandan-insists

இன்று அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச
சமூகம் இலங்கையின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் தென்பகுதி ஜனாதிபதி
வேட்பாளர்கள் நாட்கணக்கில் வடக்கில் தங்கியிருந்து தமது பிரச்சாரத்தை
மேற்கொள்வதற்கும் தமிழ் பொதுவேட்பாளர் எண்ணக்கருவும் ஒரு காரணம் என்பதை மக்கள்
புரிந்துகொண்டுள்ள நிலையில் அதனை வலுப்படுத்துவதற்கு அனைத்து அரசியல்
தலைமைகளும் இதய சுத்தியுடன் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றோம்.

தோழர் பத்மநாவின் கூற்றுக்கு அமைய
ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று இறுதி வெற்றிவரை உறுதியுடன் போராடுவோம்
என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 34ஆவது தியாகிகள் தினத்தில்
உறுதியளிக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.