நடிகர்கள் தற்கொலை என்பது தொடர்கதையாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களது தற்கொலை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
தற்போது கன்னட சின்னத்திரை மற்றும் சினிமா நடிகை சோபிதா ஷிவன்னா என்பவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 12 சீரியல்கள், பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய நடிகை.. யார் பாருங்க
காரணம் என்ன?
கர்நாடகாவை சேர்ந்த சோபிதா திருமணம் ஆகி கடந்த இரண்டு வருடங்களாக அந்த வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார். நவம்பர் 30ம் தேதி அவர் ஃபேனில் சேலையை கட்டி தூக்கிட்டு கொண்டிருக்கிறார்.
அவர் தற்கொலைக்கு காரணம் என்ன என போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.