அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள ஒரு பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசலையில் இன்று(27.08.2025) காலை வழிபாடு நடந்த போதே குறித்த தாக்குதல் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 10 வயதுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
14 குழந்தைகள் காயம்
குறித்த துப்பாக்கிச் சூடு, குழந்தைகள் மற்றும் வழிபாட்டாளர்களை குறிவைத்து வேண்டுமென்றே நடத்தப்பட்ட வன்முறைச் செயல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக கைத்துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 14 பேர் குழந்தைகள் என்றும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.