முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

காசா (Gaza) உதவி மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் பொதுமக்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் உள்ள ஓர் உதவி விநியோக மையத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 48 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

பலஸ்தீனியர்கள் கூட்டம்

பலஸ்தீனியர்கள் கூட்டம் அந்த மையத்தை முற்றுகையிட்டதால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம் | Shooting At Gaza Aid Center

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வகிக்கும் தளத்தில் உதவிப் பொருட்களை பெற முயன்ற கூட்டத்தினர் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு 

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இஸ்ரேலிய டாங்க் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்டதாகவும், ஒரு இராணுவ ஹெலிகாப்டர் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தீச்சுடர்களை வீசுவதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம் | Shooting At Gaza Aid Center

பலஸ்தீனிய பகுதிகளுக்கான ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைவர் அஜித் சங்கே, ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி பெரும்பாலான காயங்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டவை என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம், காசாவில் நிலவும் அவநம்பிக்கையான மனிதாபிமான சூழ்நிலையையும், உதவி விநியோகத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பைப் பற்றிய அவசர கேள்விகளையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்