குடும்பஸ்தன்
மணிகண்டன் நடிப்பில் தரமான கதைக்களத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குடும்பஸ்தன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்திருந்தார். இப்படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
யதார்த்தமான கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தின் கதையை முதலில் கேட்டது நடிகர் அசோக் செல்வன் தான், ஆனால் அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால், இப்படத்தில் மணிகண்டனை நடிக்க சிபாரிசு செய்தார்.
வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ முழு விவரம்
மிஸ் செய்த நடிகர்
இந்த நிலையில், குடும்பஸ்தன் திரைப்படத்தை அசோக் செல்வன் மட்டுமல்ல வேறொரு நடிகரும் மிஸ் செய்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகர் சிபி ராஜ் தான்.
இதுகுறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதில் “சமீபத்தில் குடும்பஸ்தன் படம் பார்த்தேன். அந்தக் கதை எனக்கும் வந்தது. சில காரணங்களால் அந்தப் படம் மிஸ் ஆயிடுச்சு. ஆனா, அந்த படம் பார்க்கும்போது, கோயம்புத்தூர் ஸ்லாங் என்பதை எல்லாம் தாண்டி, அந்த கதாபாத்திரத்தை மணிகண்டன் பண்ண அளவுக்கு வேற யாரும் பண்ணியிருக்க முடியாது. எனக்கு படம் பார்க்கும் போது, அவங்க பேசுற ஸ்லாங் எல்லாம் எனக்கு ஊருக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல் இருந்தது” என கூறியுள்ளார்.