சிம்பு
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் திரைப்படம் வெளிவரவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் கமல் ஹாசன், த்ரிஷா மற்றும் சிம்பு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அடுத்து பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது.
அதை தொடர்ந்து அவரது 50 – வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி, ஓ மை கடவுளே மற்றும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குநருடன் இணைந்து 51 – வது படமான God Of Love படத்தில் நடிக்கவுள்ளார்.


பஹல்காம் தாக்குதல், இந்து – முஸ்லீம் மோதல் அல்ல.. நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்
அதிரடி அப்டேட்
இந்நிலையில், சிம்புவின் 49 – வது படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘எஸ்டிஆர் 49’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


