சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவரை பல லட்சம் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். சிம்பு நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது.
முதல் முறையாக உலகநாயகன் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு நடித்து வருகிறார். மணி ரத்னம் இப்படத்தை இயக்கி வருகிறார்.
கவுதம் மேனன் – சிம்பு கூட்டணி என்றாலே அது ஹிட் தான். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிப்படங்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளனர்.
இதில் கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பத்ம பூஷன் விருது வென்றுள்ள அஜித்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் தற்போது அதற்கான காரணம் குறித்து பகிர்ந்துள்ளார்.
காரணம் இதுதான்
அதில், வெந்து தணிந்தது காடு படத்தின் 2 – ம் பாகத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்டோம். ஆனால் சிம்பு தற்போது படம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை அதனால், படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியவில்லை” என்று கூறியுள்ளார்.