சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து, மிகப்பெரிய ஹிட் ஆன படம் சந்திரமுகி.
அதில் சந்திரமுகியாக ஜோதிகாவின் நடிப்புக்கு அதிகம் பாராட்டுகள் கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் முதலில் சந்திரமுகியாக நடிக்க இருந்தது அவர் இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

சிம்ரன்
நடிகை சிம்ரன் தான் முதலில் சந்திரமுகியாக நடித்தாராம். 3 நாட்கள் ஷூட்டிங்கிற்கு பிறகு அவர் விலகிக்கொள்வதாக தெரிவித்துவிட்டாராம். தான் கர்பமாக இருப்பதால் அப்படி ஒரு முடிவை எடுப்பதாக கூறினாராம்.
அதற்கு பிறகு தான் ஜோதிகாவுக்கு இந்த பட வாய்ப்பு சென்று இருக்கிறது. இந்த விஷயத்தை சிம்ரனே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.


