உன்னி கிருஷ்ணன்
தமிழ் சினிமா உலகில் பிரபல பாடகராக வலம் வந்தவர்களில் ஒருவர் உன்னிகிருஷ்ணன்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடகராக களமிறங்கியவர் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார்.
திருமணம்
உன்னிகிருஷ்ணன் 1994ம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு உத்ரா மற்றும் வாசுதேவ் என 2 குழந்தைகள் உள்ளனர்.
அவரது மகள் உத்ரா, சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு என்ற பாடலை பாடி பிரபலமடைந்தார்.
பிறகு பிசாசு, லட்சுமி போன்ற படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
உன்னி கிருஷ்ணன் மகன் வாசுதேவ், கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். வாசுதேவிற்கு, உத்ரா என்ற பெண்ணுடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்துள்ளது.
மணமக்களை வாழ்த்தி கவிஞர் வைரமுத்து தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவும் போட்டுள்ளார்.
View this post on Instagram