சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரை நெஞ்சங்கள் கொண்டாடும் ஹிட் சீரியலாக உள்ளது சிறகடிக்க ஆசை.
பொதுவாக வில்லி என்றால் மொத்தமாக வில்லியாகவே இருப்பார். ஆனால் இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி என்ற கதாபாத்திரம் நல்லவரா, கெட்டவரா என்று யோசிக்க முடியாத அளவிற்கு அவரது கதாபாத்திரம் செல்கிறது.
ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் என மாறி மாறி நிறைய தவறுகள் செய்த வண்ணம் உள்ளார்.
ரசிகர்கள் இவர் இப்போவாவது சிக்குவாரா என ஒவ்வொரு முறையும் எதிர்ப்பார்க்க தப்பித்துக் கொண்டே உள்ளார்.
சந்தானம்
இந்த சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களால் கொண்டாடப்படும் நடிகராக உள்ளார் பழனியப்பன்.
இவர் சமீபத்தில் சந்தானம் பிறந்தநாள் அன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். அவரை வாழ்த்தும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram