சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை இந்த தொடரில் இப்போது சில விறுவிறுப்பான கதைக்களம் செல்கிறது.
முதலில் ரோஹினி மறைத்து வைக்க கூறியுள்ள க்ரிஷ் விஷயத்தை கூறவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் மீனா போராடி வருகிறார். இதற்கு இடையில் முத்து, க்ரிஷை தத்தெடுக்க செல்ல மீனா வேண்டாம் என கூறியதால் அவர் மிகுந்த கஷ்டத்தில் உள்ளார்.

இதற்கு இடையில் முத்துவை வம்பிழுக்க அருண் அவரை மோசமாக பேச சட்டையை கிழித்து இருவருக்கும் அடிதடி நடக்கிறது.
வழக்கம் போல் அருண் தான் எதுவும் செய்யவில்லை என முத்து மீது அனைத்து பழியையும் போடுகிறார், இதனால் சீதா, முத்துவை கோபமாக பேசுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் சரண்யாவின் அழகிய போட்டோஸ்

புரொமோ
முத்து-அருண் பிரச்சனை சென்றுகொண்டிருக்க இன்னொரு பக்கம் ஸ்ருதி-ரவி இடையே பிரச்சனை வெடிக்கப்போவதாக தெரிகிறது.

அதாவது போட்டிக்கு சென்றுவந்த ரவி அறைக்கு வந்ததும் தனது துணிகளை எடுக்கிறார். அப்போது நீதுவின் உடை அவரது Suitcaseல் இருப்பதை கண்ட ஸ்ருதி கோபமாக ரவியை பார்க்கிறார்.
இதுவைத்து இருவருக்குள்ளும் பிரச்சனை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

