சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் தொடர் சிறகடிக்க ஆசை. கதையில் ரோஹினி பற்றிய உண்மை மீனாவிற்கு தெரிந்ததுமே பிரச்சனை வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் ரோஹினி மீனாவிடம் உண்மையை வெளியே கூறினால் நானும், க்ரிஷும் இறந்துவிடுவோம் என கூறி மிரட்டியுள்ளதால் அவர் வீட்டில் கூறவில்லை. அதற்கு மாறாக ரோஹினி செய்யச்சொல்லும் அனைத்து விஷயங்களையும் மீனா செய்துகொண்டு வருகிறார்.

எபிசோட்
க்ரிஷ் வைத்து ஏற்கெனவே வீட்டில் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்க பிஏ மூலம் இன்னொரு பிரச்சனை தொடங்கியுள்ளது. அதாவது க்ரிஷை பள்ளியில் இருந்து கடத்திவைத்து ரோஹினிக்கு போன் செய்து ரூ. 2 லட்சம் கேட்கிறார்.

முத்து, அண்ணாமலை என குடும்பத்தினர் அனைவரும் க்ரிஷ் காணவில்லை என பதற ரோஹினி சொன்னது போல் பிஷ மனோஜிற்கு போன் செய்து கடத்தி வைத்துள்ளேன், ரூ. 2 லட்சம் வேண்டும் என்கிறார்.
பண விஷயமாச்சே வழக்கம் போல் விஜயா மோசமாக பேச முத்து பணத்தை எடுத்துக்கொண்டு செல்கிறார். கடத்தல் காரர்களை பார்த்தவர் வெளுத்து வாங்குகிறார், ஜஸ்ட் மிஸ் ஆகி அவர் முத்துவிடம் இருந்து தப்பித்துவிடுகிறார்கள்.

முத்து கடத்தல் காரர்களை விரட்டி செல்லும் போது அருண் வர அவரிடம் உதவி கேட்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.

