சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.
இன்றைய எபிசோடில் மனோஜ் தனது அப்பாவிடம் கேட்டதை தாண்டி தம்பி ரவியிடம் பண உதவி கேட்கிறார். அவரை அவரது மாமனாரிடம் பணம் கேட்கும் படி மனோஜ் கூற ரவி கோபமாக பேசி அனுப்பிவிடுகிறார்.
இன்னொரு பக்கம் மனோஜின் முன்னாள் காதலி மீண்டும் இந்தியா வர இருப்பதால் முத்துவிற்கு போன் செய்து கேக் புக் செய்கிறார். அடுத்த வாரம் ஏதாவது உண்மை வெளிவருமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
வைரல் போட்டோ
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான முத்து என்கிற வெற்றி வசந்தின் ஒரு புகைப்படம் வைரலாகிறது.
வெற்றி வசந்த் பிரபல சீரியல் நடிகை பரீனா மற்றும் குழந்தையுடன் செல்பி எடுக்கும் போட்டோ தான் வைரலாகிறது. அதைப்பார்த்து ரசிகர்கள் புதிய சீரியலா என்கின்றனர், பலர் இது விளம்பரம், குறும்படம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
உண்மையில் இந்த புகைப்படம் எதற்காக என்பதை பொறுத்திருந்து காண்போம்.