சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து சீதா-அருண் திருமண விஷயங்கள் பரபரப்பாக செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்றைய எபிசோடில், ரோஹினி, ஸ்ருதி அம்மாவிடம் இருந்து பணத்தை வாங்கிவந்து விஜயாவிடம் கொடுக்கிறார். விஜயாவும் அந்த பணம் என்னை ஏமாற்றியதற்கான பைன் என கூறிவிட்டு செல்கிறார்.
இன்னொரு பக்கம் முத்து, சீதா கல்யாணம் பற்றி நினைக்கிறார், அருண் அம்மாவும் தனது மகன் திருமணம் குறித்து அவரிடம் பேசுகிறார்.
கடைசியில் மீனா முத்துவிடம் இந்த விஷயம் மறைத்து வைப்பது கஷ்டமாக உள்ளது என சீதாவிடம் கூறி புலம்புகிறார்.

புரொமோ
நாளைய எபிசோடின் புரொமோவில், ஸ்ருதி மீனாவிடம், பேசாமல் சீதா காதலித்த அருணுக்கும் பதிவு திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்கிறார்.
அதைக்கேட்ட அண்ணாமலை அப்படி செய்யக் கூடாது அவது தவறு. மீனா ஒருபோதும் இப்படி ஒரு விஷயத்தை செய்ய மாட்டாள் என்ற கூற அவர் அப்படியே செய்வது அறியாமல் தவிக்கிறார்.
View this post on Instagram

