சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டாப் தொடர்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் முதலில் வருவது சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து-மீனா என்ற அழகிய ஜோடியின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் தொடங்கிய நாள் முதல் ரோஹினி என்ற கதாபாத்திரத்தை வைத்து நிறைய பரபரப்பான காட்சிகளுடன் தொடர் ஒளிபரப்பானது.
அவர் மறைத்த பெரிய விஷயம் தனது முதல் திருமணம் நடந்து மகன் இருக்கிறான் என்பது தான்.

புரொமோ
அந்த விஷயம் எப்போது வெடிக்கும் வெடிக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடைசியில் வெடிக்காமல் மீனாவிற்கு தெரிந்ததால் புஸ் என ஆனது.
பிரச்சனை பெரிதாகாமல் மீனா ரோஹினிக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நாளைய எபிசோடின் புரொமோவில், க்ரிஷ் திடீரென மனோஜை அப்பா என அழைக்க குடும்பத்தினர் அனைவரும் செம ஷாக்.

பின் அண்ணாமலை உன்னை யார் அப்படி அழைக்க சொன்னார் என கேட்க, அவன் மனோஜ்-ரோஹினி பார்த்து கை காட்டுகிறான். இனி என்ன நடக்கும் என்பதை அடுத்த வாரம் காண்போம்.

