சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருந்து வந்த சீரியல் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா என்ற நல்ல குணம் கொண்ட ஜோடியின் வாழ்க்கை பயணமே இந்த தொடரின் கதையாக அமைந்து வருகிறது. இப்போது கதையில் பெரிய ஆர்டரை பிடித்துக்கொடுத்த ரோஹினியை கொண்டாடி வருகிறார் விஜயா.
இதனால் மனோஜ்-ரோஹினிக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்வது போன்று நிறைய கலாட்டா செய்து வருகிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், தனது தூரத்து சொந்தக்காரருக்கு கார் வேண்டும் என்பதால் அந்த சவாரியை முத்துவிற்கு கொடுக்கிறார் முருகன்.
அவர்கள் யார் என்று பார்த்தால் ரோஹினி முதல் கணவரின் அண்ணன் தானாம், அவர்கள் குழந்தை பிறக்க சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளனர்.
முருகன் உறவினர் வித்தியாவிடம் ரோஹினி பற்றிய கதையையும், திருமண புகைப்படத்தை காட்ட அவர் ஷாக் ஆகி இந்த விஷயங்களை ரோஹினியிடம் கூறுகிறார்.

இதனால் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை என குழம்பிய ரோஹினி தனது அம்மாவிற்கு ஒரு வேலை வைக்கிறார். அதாவது சிகிச்சைக்கு வந்தவர்களுடன் முத்து உள்ளாரா, அவர்கள் எப்போது ஊர் திரும்புவார்கள் என்பதையெல்லாம் விசாரிக்க கூறுகிறார்.


