சிறகடிக்க ஆசை
ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் மூலம் நடிக்க தொடங்கியவர் சல்மா அருண்.
முதல் சீரியலிலேயே வில்லியாக நடிக்க தொடங்கியவருக்கு நல்ல ரீச் கொடுத்த தொடர் என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தான். இதில் சல்மா அருண் கதாபாத்திரம் வில்லியாக சென்று கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து இவர் தனது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள செய்த தில்லு முல்லு எல்லாம் வெளியே வந்து கொண்டிருக்கிறது.
புதிய கார்
திருமணம், குழந்தை பிறகு நடிக்க களமிறங்கியுள்ள சல்மா அருண் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது கணவர் மற்றும் மகனுடன் சென்று புதிய காரை வாங்கியுள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு தெரிய வர வாழ்த்து கூறி வருகிறார்கள்.